தவெக கொடியுடன் விடாமுயற்சி படத்திற்கு வந்த தொண்டர் - தாக்குதல் நடத்திய அஜித் ரசிகர்கள்

Ajith Kumar Vijay Tirunelveli VidaaMuyarchi Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Feb 07, 2025 01:47 PM GMT
Report

 விடாமுயற்சி படம் வெளியான திரையரங்கிற்கு தவெக கட்சி கொடியுடன் வந்த நபர் தாக்கப்பட்டுள்ளார்.

விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித்குமார், திரிஷா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் நேற்று(06.02.2025) திரைக்கு வந்தது.

vidaamuyarchi

2 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படம் திரைக்கு வருவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

தவெகவினர் மீது தாக்குதல்

இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள திரையரங்கு முன்பு அஜித் ரசிகர்கள் படம் பார்ப்பதற்காக குவிந்திருந்தனர். அப்போது அங்கிருந்த தவெக தொண்டர் இருவர் தவெக கட்சி கொடியை தூக்கி காண்பித்தனர்.  

ajith fans attack vijay fans tvk flag

அப்போது அங்கிருந்த அஜித் ரசிகர்கள் இருவர் கொடியை பிடிங்கி தவெக தொண்டர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். உடனடியாக காவல்துறையினர் வந்து தவெக தொண்டரை மீட்டு அனுப்பி வைத்தனர். 

அப்போது அங்கிருந்த அஜித் ரசிகர்கள் 'கடவுளே அஜித்தே',  'தவெக ஒழிக' என கோஷமிட்டனர். இது போன்ற கோஷங்களை தவிர்க்குமாறு சமீபத்தில் நடிகர் அஜித்குமார் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.