ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம் - நல்லா தான் இருக்கு என கூறிவிட்டு ‘அந்த’ நடிகரை பற்றி கேள்வி எழுப்பிய ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ், இவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது.
18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியிலும்,குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகர் தனுஷ்.மற்றும் ஐஸ்வர்யா தங்கள் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது ஆல்பம் பாடலான பயணி/முசாஃபிர் பாடலை இயக்கி வெளியிட்டார்.
தற்போது ஓ சாத்தி சல் படம் மூலம் பாலிவுட்டிலும் இயக்குனராக தடம் பதிக்க உள்ளார். மேலும் தனது ஆல்பம் பாடலான பயணி பாடலை தயாரித்த ப்ரேர்னா அரோராவுக்காக ஒரு இந்தி படத்தை இயக்கவுள்ள ஐஸ்வர்யா அதை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்சை வைத்து துர்கா என்ற புதிய படத்தையும் இயக்குகிறார்.
Strips or print..I like this tint!
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) April 10, 2022
Straight or right at you..we look ahead..Our lives travel parallel but never apart..Born we are to be bold n true at heart..But here I’m quite glad you’re looking at the road while I’m busy taking a selfie @soundaryaarajni ??#worldsiblingsday pic.twitter.com/JsqyLqP9qz
இந்நிலையில் உலக உடன்பிறப்புகளின் தினத்தை முன்னிட்டு தனது தங்கையும் திரைப்பட இயக்குனருமான சௌந்தர்யாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
இதற்கு கமண்ட் பதிவிட்ட ரஜினி ரசிகர்கள் ஃபோட்டோலாம் நல்லா தான் இருக்கு தலைவருக்கு ஒன்னும் ஆகாம பாத்துக்கோங்க என்பது போல் கூறி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இன்னொரு தரப்பு ரசிகர்கள் ஐஸ்வர்யாவிடம் சிம்புவை வைத்து எப்பொழுது படம் எடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக நடிகர் தனுஷை பழிவாங்க சிம்புவை வைத்து ஐஸ்வர்யா படம் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் தீயாக பரவியது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என சிம்பு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
