டி20 உலகக்கோப்பை தொடர் - ஐசிசி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு ஒன்று ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி உலகக்கோப்பை டி20 தொடர் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இங்குள்ள மைதானங்களில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் நடந்து வருகிறது. இதனிடையே டி20 உலகக்கோப்பை தொடரில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரில் எப்படி ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ அதனை அடிப்படையாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் இது வெற்றிகரமாக சாத்தியமாகி உள்ளதால் தற்போது டி20 உலகக்கோப்பை தொடரிலும் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
நிச்சயம் 70% வரை ரசிகர்கள் தகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவார்கள் என ஐசிசி உறுதியளித்துள்ளது. ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழையும் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதற்குண்டான பாதுகாப்பு வழிமுறைகள் ஆகிய அனைத்தையும் பின்பற்றி நடக்கவேண்டும் என்றும் ஐசிசி கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளனர்.