ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவை: நடிகர் விஜய்-க்கு சிலை வைத்த ரசிகர்கள்
விஜய்க்கு 10 அடியில் வெண்கல சிலை ஒன்றை ரசிகர்கள் திறந்துள்ளனர்நடிகர் விஜய் தற்போது 'பீஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் என கூறப்பட்டது.
விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்காக பல்வேறு மாவட்டத்தில் இருந்து சுமார் 300 -க்கும் மேற்பட்ட ரசிகர்கள் விஜய் அலுவலகத்துக்கு வந்துள்ளனர்.
இதற்கிடையே, மக்கள் மன்ற அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் முழு உருவ சிலை, ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் விஜய் கலந்துகொள்வரா இல்லையா என்பது தெளிவகவில்லை மாஸ்டர் படத்தில் JD கதா பாத்திரத்தில் நடித்ததற்காக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாஸ்டர்' படம் ரிலீஸ் ஆன நேரத்தில் பெங்களூரில் விஜய் ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்து கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.