தோனிக்கு உருக்கமான கடிதம் எழுதிய ரசிகர் : பதிலுக்கு தோனி செய்த நெகிழ்ச்சி செயல்!
ஐபிஎல் போட்டியின் 15-வது சீசன் மும்பை மற்றும் புனேவில் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் சென்னை அணி 13 போட்டியில் விளையாடி 4-ல் மட்டுமே வெற்றி பெற்றதால் பிளே ஆஃப் போட்டிகளுக்கு செல்லும் வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ரசிகர் ஒருவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
Words from the ? framed for life &
— Chennai Super Kings (@ChennaiIPL) May 17, 2022
signed with 7⃣ove!#SuperFans #WhistlePodu #Yellove ? pic.twitter.com/cpYgyTxBOI
அதில் தோனி மீதான தனது அன்பையும் , கேப்டன் தோனி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தையும் அந்த ரசிகர் உருக்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.
இதனைப் பார்த்த தோனி , அந்தக் கடிதத்திற்கு, 'நன்றாக எழுதப்பட்டுள்ளது . வாழ்த்துகள்' என்று பதில் அளித்து தனது கையெழுத்தும் போட்டுள்ளார்.
இதனை சென்னை அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது