செல்பி எடுக்க வந்து நடிகையை முத்தமிட முயன்ற ரசிகர் - வைரலாகும் வீடியோ
செல்பி எடுக்க வந்து பூனம் பாண்டேவிடம் ரசிகர் அத்துமீறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூனம் பாண்டே
33 வயதான பூனம் பாண்டே(poonam pandey) பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2011 கிரிக்கெட் உலகக் கோப்பைபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், ஸ்டேடியத்தில் தனது ஆடைகளை கழற்றுவதாக கூறி இந்திய அளவில் பிரபலமானார்.
அந்த போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்ற போது, பிசிசிஐ அனுமதிக்கவில்லை என கூறி அதை செய்யவில்லை. ஆனால் தனது சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
முத்தமிட முயற்சி
கடந்த ஆண்டு பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்ததாக மேனேஜர் மூலம் அறிவித்துவிட்டு, பின்னர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக்காக இவ்வாறு செய்ததாக கூறி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இந்நிலையில் பூனம் பாண்டேவிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொது வெளியியில் நின்று கொண்டிருக்கும் பூனம் பாண்டேவிடம் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வருகிறார்.
பூனம் பாண்டே போஸ் கொடுத்த போது, அந்த நபர் அவரை முத்தமிட முயற்சி செய்கிறார். உடனடியாக சுதாரித்த பூனம் பாண்டே, அந்த நபரை தள்ளி விட்டு சென்று விட்டார்.