ரூ.72 கோடி சொத்தை நடிகருக்கு எழுதிவைத்து உயிரிழந்த ரசிகை - நடிகர் கொடுத்த ரியாக்சன்
ரசிகை இறப்பதற்கு முன்னர் தனது ரூ.72 கோடி சொத்தை நடிகருக்கு எழுதி கொடுத்துள்ளார்.
சஞ்சய் தத்
இந்தியாவில் சினிமா பிரபலங்களை கடவுள் போல பாவித்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள். நடிகருக்கு உடல்நிலை பாதிக்கபட்டால் அவருக்காக கோவிலில் மண் சோறு சாப்பிடுவது தொடங்கி, நடிகைகளுக்கு கோவில் கட்டிய சம்பவங்களும் நடந்துள்ளது. அதே போல, ரசிகை ஒருவர் இறப்பதற்கு முன்னர் தனது சொத்துக்களை நடிகர் சஞ்சய் தத்திற்கு எழுதி வைத்துள்ளார்.
நடிகர் சஞ்சய் தத், 135 படங்களுக்கு மேல் நடித்து பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருகிறார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இவருக்கு தொடர்பு உள்ளதாக பல மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.
தீவிர ரசிகை
இவர் ஹிந்தி படங்களில் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். KGF-2, லியோ படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார்.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த நிஷா பாட்டீல் என்பவர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகராவார். கல்யாணம் செய்தால் சஞ்சய் தத்தை தான் செய்வேன் என கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலே இருந்துள்ளார்.
ரூ.72 கோடி
இவர் தனது 62 வயதில் உயிரிழந்த போது, தனது சொத்துக்களை நடிகர் சஞ்சய் தத் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். நடிகர் சஞ்சய் தத்தை தொடர்பு கொண்டு காவல்துறையினர் இந்த விசயத்தை கூறிய போது சஞ்சய் தத் அதிர்ச்சியடைந்துள்ளார்.
"நான் நிஷா பாட்டீலை பார்த்தது கூட கிடையாது. ஆனால் அவரது இறப்பு எனக்கு வருத்தம் அளிக்கிறது. நான் அவரது சொத்துக்களை எதுவும் ஏற்க போவதில்லை. நிஷாவின் குடும்பத்திற்கே அந்த சொத்து கிடைக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். நிஷா பாட்டீலின் பெயரில் ரூ.72 கோடி சொத்து இருந்துள்ளது.