அதிவேகமாக சென்ற பிரபல யூடியூபர் TTF வாசன் - தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார்

Tamil Nadu Police
By Thahir Oct 01, 2022 05:27 AM GMT
Report

அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட வாசன் கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இருசக்கர வானத்தில் அதிவேகமாக செல்வதை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவேற்றி வருபவர் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன்.

இவர் அண்மையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் போலீசார் இவரை எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பிரபல யூடியூபர் ஜி.பி.முத்துவை அழைத்துக் கொண்டு கொச்சி சாலையில் 150 கி.மீ அதிவேகமாக சென்றதை வீடியோ பதிவாக எடுத்து வெளியிட்டு இருந்தார்.

அதிவேகமாக சென்ற பிரபல யூடியூபர் TTF வாசன் - தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார் | Famous Youtuber Ttf Vasan Arrested

வழக்குப்பதிவு - ஜாமீன்

இதன் வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், போத்தனுார் காவல் நிலையத்தில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது சாலை விதிகளை மீறுதல், அஜாக்கிரதையாக மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டது.

இந்த நிலையில் சூலுார் காவல்நிலையத்தில் ஐபிசி 279 ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டுதல், மோட்டர் வாகனச் சட்டம் 189 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டது.

இதனையடுத்து இவர் விரைவில் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்த டிடிஎஃப் வாசன் மாலை வரை நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்டார்.பின்னர் அவரிடம் இரண்டு உத்தரவாதம் பெறப்பட்ட நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

செய்தி சேனல்களுக்கு பகிரங்க எச்சரிக்கை

இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் எனக்கு யாரை பார்த்தும் பயம் கிடையாது.

நியூஸ் சேனல்கள் எல்லாம் என் பவர் தெரியாம விளையாடுறீங்க..நியூஸ் சேனல் பார்த்து பயம் கிடையாது. எனக்கு யாரை பார்த்தும் பயம் கிடையாது எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.

நீங்க எல்லையை கடந்து போயிட்டு இருக்கீங்க.. என்று செய்தி சேனல்களுக்கு பகிரங்க எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

அதிவேகமாக சென்ற பிரபல யூடியூபர் TTF வாசன் - தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார் | Famous Youtuber Ttf Vasan Arrested

இந்த நிலையில் காவல்துறைக்கும் அவர் எச்சரிக்கை கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகும் நிலையில் கண்டன குரல்களும் எழுந்தது.

இதனிடையே நேற்று இரவு சூலூர் காவல் துறையினர் பெங்களூர் சென்ற போது செக் போஸ்டில் மடக்கி பிடித்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.