பிரபல யூடியூபர் படகில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் : விசாரணையில் காவல்துறையினர்

investigation fisherman youtuber nagapattinam
By Irumporai Sep 29, 2021 06:16 AM GMT
Report

யூடியூபில் நாகை மீனவன் என்று பிரபலமாக அறியப்படும் குணசீலன் என்பவரது படகில் இருந்து 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நாகை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் ஆய்வாளர் மாசிலாமணி தலைமையிலான சுங்கத்துறை அதிகாரிகள் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

பிரபல யூடியூபர் படகில்  150 கிலோ கஞ்சா பறிமுதல் : விசாரணையில் காவல்துறையினர் | Famous Youtube Boat Police In The Investigation

கடந்த திங்கட்கிழமை இரவு மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் கண்ணாடி நாரிழை படகு ஒன்றில் மூட்டைகளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனடியாக படகில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், படகில் இருந்த 15 கிலோ கஞ்சா கொண்ட 10 மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

அதே போல, 4 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், யூடியூபில் நாகை மீனவர் என்ற சேனலை நடத்திவரும் குணசீலன்(26) என்பவரது படகில் கஞ்சா கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

யூடியூப் சேனலை நடத்துவதாக கூறி ஃபைபர் படகை கஞ்சா கடத்துவதற்கு அவர் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.