பிரபல இளம் பாடகர் கார் விபத்தில் மரணம்

singer dead car dilijaan
By Jon Mar 30, 2021 06:36 PM GMT
Report

பிரபல பஞ்சாபி பாடகரான தில்ஜான் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 31 வயதான தில்ஜான் இன்று காலை அமிர்தசரஸில் இருந்து கர்தார்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜாந்தியாலா குரு என்ற பகுதியில் சாலையோரம் நின்றிருந்த டிரக் மீது தில்ஜானின் கார் மோதியது.

இதைப் பார்த்தவர்கள் உடனடியாக தில்ஜானை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் செல்லும் வவழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தகவல் வெளியாகி திரையுலகினர் மட்டுமின்றி தில்ஜானின் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இத்துயர செய்திகளை தங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், தில்ஜானின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திப்பதாக அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் தற்போது கனடாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.