பிரபல தெலுங்கு நடிகருக்கு கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் திரையுலகம்

covid19 teluguactor jrntr
By Irumporai May 10, 2021 10:40 AM GMT
Report

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொர்றின் 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்த கொரோனா தொற்று பிரபலங்களையும் விடவில்லை. ஏராளமான சினிமா நடிகர், நடிகைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில்: 'கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். கவலைப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன். நானும் என் குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைபடி சிகிச்சை எடுத்து வருகிறோம்.

கடந்த சில நாட்களாக என்னை தொடர்பு கொண்டவர்கள் கொரோனா சோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.