பிரபல தமிழ் நடிகர் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்!
passedaway
Amarasikamani
By Irumporai
தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா 2-ம் அலையில் பல சினிமா பிரபலங்கள் கொரோனா காரணமாகவும், மாரடைப்பு காரணமாகவும் மரணித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
காமெடி நடிகர்களான விவேக், மாறன், நெல்லை சிவா, பவுன்ராஜ், பாண்டு, இயக்குநர்கள் தாமிரா, கே.வி.ஆனந்த் என அடுத்தடுத்த மரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது .
இந்த நிலையில் நடிகரும் கவிஞருமான அமரசிகாமணி இன்று காலை இயற்கை எய்தினார் .
தமிழ்சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் அமரசிகாமணி. நடிகர் மட்டுமல்லாமல் கவிஞராகவும் அறியப்படுபவர்.
அவருக்கு வயது 71.
அமரசிகாமணியின் இறுதி சடங்கு மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இலலத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.