பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மாரடைபால் காலமானார் - திரையுலகினர் இரங்கல்..!
Kamal Haasan
Tamil Cinema
By Thahir
பிரபல தமிழ் திரைப்பட துணை குணச்சதித்திர நடிகர் பூ ராமு மாரடைப்பால் காலமானார்.
அறிமுகம்
நடிகர் கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் படத்தில் நடித்திருந்தாலும், இயக்குனர் சசியின் 'பூ' படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார், எனவே 'பூ' ராமு என்று அழைக்கப்பட்டார்.
ராமு, 'நண்பன்', 'சூரரைப் போற்று', 'கர்ணன்', 'பரியேறும் பெருமாள்', 'நீர்ப்பறவை', 'தங்கமீன்கள்' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.
உயிர் பிரிந்தது
தமிழ் சினிமாவில் துணை குணச்சித்திர நடிகரும் தெரு நாடகக் கலைஞரான பூ ராமு உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.