பிரபல பாடகி எஸ்.ஜானகி காலமானார்.... துயரத்தில் சினிமா பிரபலங்கள்

S Janaki
By Manchu Jul 11, 2026 04:46 PM GMT
Report

பிரபல பாடகி எஸ்.ஜானகி தனது 88 வயதில் வயது மூப்பு காரணமாக மைசூரில் காலமாகியுள்ளது பிரபலங்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எஸ்.ஜானகி

இந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தினை பிடித்தவர் தான் பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரரான ஜானகி தற்போது 88 வயதாகியுள்ள நிலையில், வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

பிரபல பாடகி எஸ்.ஜானகி காலமானார்.... துயரத்தில் சினிமா பிரபலங்கள் | Famous Singer S Janaki Passes Away

தனது ஒன்பதாவது வயதிலேயே மேடை நிகழ்ச்சியில் பாடி அசத்தியவர், 1957ம் ஆண்டு சினிமாவில் பாடகியானார். பல மொழிகளில் பல இசையமைப்பாளர்களுடன் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

பல விருதுகளை வாங்கிய இவர் மத்திய அரசின் பத்மபூசன் விருதை வாங்க மறுத்துள்ளார். எப்பொழுதும் மக்களின் மனதில் இருக்கும் குரலுக்கு சொந்தக்காரரான ஜானகி அம்மா இன்று காலாமாகியுள்ளது ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.