பிரபல பாடகர் படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி..!

By Thahir May 31, 2022 06:51 PM GMT
Report

பிரபல பாடகரான கேகே ஹோட்டலில் தங்கியிருந்த படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 மணி நேரத்திற்கு முன்பு கொல்கத்தா ஆடிட்டோரியத்தில் நடந்த இசை நிகழ்ச்சியின் காட்சிகள் உள்ளது.

பிரபல பாடகர் படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு  - ரசிகர்கள் அதிர்ச்சி..! | Famous Singer Fell From The Steps And Died

52 வயதான பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் என்ற கேகே தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

1990களில் அவர் பாடிய பால் மற்றும் யாரோன் போன் பாடல்கள் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு பின்னர் தங்கியிருந்த ஹோட்டலின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் என்ற கேகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.