பிரபல ரவுடி நீராவி முருகன் போலீசாரால் சுற்றி வளைத்து சுட்டுக்கொலை - திருநெல்வேலியில் பரபரப்பு
police
Shooting
Encounter
Famous Rowdy
Niravi-Murukan
பிரபல ரவுடி
நீராவி முருகன்
சுட்டுக்கொலை
By Nandhini
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் இன்று காலை பிரபல ரவுடி நீராவி முருகனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.
ரவுடி நீராவி முருகன் மீது கொலை, கொள்ளை உள்பட பல வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் பல மாதங்களாக தேடி வந்தனர்.
இன்று காலை நாங்குநேரியிலிருந்து களக்காடு செல்லும் வழியில் முருகன் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.