சென்னையில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை - போலீசார் விசாரணை

Chennai Tamil Nadu Police
By Thahir Oct 21, 2022 09:06 AM GMT
Report

சென்னையில் பிரபல ரவுடி 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்ட பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை 

கொருக்குப்பேட்டை சேர்ந்த பிரபல ரவுடி லொடங்கு மாரி (வயது 40). இவர் மீது சென்னை புளியந்தோப்பில் 25 வழக்குகளுக்கும் மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில், பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மதுஅருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொருக்குப்பேட்டை மாரி உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் லொடங்கு மாரியை வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளது.

Famous rowdy killed in Chennai

இதில் லொடங்கு மாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று லொடங்குமாரியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தப்பியோடிய குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.