புற்றுநோயால் பிரபல தயாரிப்பாளர் காலமானார் - திரைத்துறையினர் இரங்கல்

Ajith Kumar Tamil Cinema
By Thahir Apr 29, 2023 05:47 AM GMT
Report

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி புற்றுநோய் பாதிப்பாளர் காலமானார்.

தமிழ் சினிமாவில் அஜித்தின் நண்பர் 

தமிழ் சினிமாவில் திரைப்படத் தயாரிப்பாளராக வலம் வந்தவர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி நடிகர் அஜித்தின் நண்பரான இவர்,

அஜித் நடித்த ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு ,உள்ளிட்ட ஒன்பது திரைப்படங்களை தயாரித்தார். அதன் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்திருந்தார்.

புற்றுநோயால் பிரபல தயாரிப்பாளர் காலமானார் - திரைத்துறையினர் இரங்கல் | Famous Producer Passed Away Due To Cancer

அடுத்தடுத்த படங்களை தயாரித்த எஸ்.எஸ் சக்கரவர்த்திக்கும் அவரின் நண்பர் அஜித்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

புற்றுநோயால் காலமானார் 

பின்னர் அவர் எடுத்த திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்காத நிலையில் திரைப்படங்களை தயாரிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

புற்றுநோயால் பிரபல தயாரிப்பாளர் காலமானார் - திரைத்துறையினர் இரங்கல் | Famous Producer Passed Away Due To Cancer

இந்த நிலையில் கடைசியா நடிகர் விமல் நடித்த விலங்கு என்ற இணைய தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார்.

இதனிடையே புற்றுநோய் பாதிப்பால் கடும் அவதியடைந்து வந்த அவர் நேற்று நள்ளிரவு காலமானார். எஸ்.எஸ்.சக்கரவர்த்தி காலமானதை அடுத்து திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.