பிரபல சாமியார் மர்ம மரணம் சீடருக்கு தொடர்பா? வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசு உத்தரவு
உத்தரப் பிரதேசம் பாகம்பரி மடத்தைச் சேர்ந்தவர் அகில் பார்திய அகாரா பரிஷத் தலைவர் மகந்த் நரேந்திர கிரி. இவர் மடத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து நடத்திய விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது.
இந்த நிலையில் நரேந்திர கிரி இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் நரேந்திர கிரி ,மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும் தனக்குப் பிறகு யாருக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதையும் அந்த கடிதத்தில் எழுதியிருந்ததாகவும் கூறப்பட்டது.
அதே சமயம் சாமியாரின் மரணம் கொலையாகக் கூட இருக்கலாம் என சிலர் சந்தேக்கின்றனர். குறிப்பாக நரேந்திர கிரியின் சீடர் கிரி பவான் மகராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் மற்றொரு சீடர் ஆனந்த் கிரி கைது செய்யப்பட்டார்.
இதனிடையே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மகேந்திர கிரி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசியபோது மகந்த் நரேந்திர கிரி மரணம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது எனவும் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்” என்றார்.
தேவைப்பட்டால் வழக்கினை சிபிஐ க்கு மாற்றம் செய்வோம் என துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் தெரிவித்திருந்த. அதன்படி தற்போது மகந்த் நரேந்திர கிரி மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்து மாநில உள்துறைஅமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.