பிரபல பாடலாசிரியர் மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல பாடலாசிரியர் புலமைபித்தன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1968 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தில் வரும் நான் யார் நீ யார் என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான புலமைப்பித்தன் சிவாஜி, ரஜினி, கமல் முதல் விஜய், ஜெயம் ரவி உள்ளிட்ட தற்கால ஹீரோக்கள் வரை அனைவரது படத்திற்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.
முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆரால் தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் நியமிக்கப்பட்டவர் புலமைபித்தன் சட்டமன்ற உறுப்பினர் குழுவின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
85 வயதான அவருக்கு நேற்று நள்ளிரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புலமைப்பித்தனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ந்து டாக்டர்கள் குழு கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.