பிரபல நாடக கலைஞர் சுப்புராயன் காலமானார்

Passed Away Subramanian Playwright
By Thahir Jan 06, 2022 10:33 AM GMT
Report

புதுச்சேரி விடுதலைக்காக நாடகம் மூலம் குரல் கொடுத்தவர் நாடக கலைஞர் சுப்புராயன்.

காரைக்கால் மாவட்டத்தின் மூத்த நாடக கலைஞரான சுப்புராயன் பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்து புதுச்சேரி சுதந்திரம் பெறுவதற்கு தனது நாடகங்கள் மூலம் முதன் முதலில் குரல் கொடுத்தார்.

சாணக்கியன் என்ற நாடகத்தில் ஆவேச வசனம் பேசி நடித்ததால், சாணக்கியன் சுப்பராயன் என்று அழைக்கப்பட்டார்.

200க்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்களை உருவாக்கி உள்ளார். புதுச்சேரி அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்தது.

இந்திய அரசு சுப்புராயன் அவர்களை கெளரவிக்கும் வகையில் தபால் தலை வெளியிட்டுள்ளது. 91 வயதான சுப்புராயன் வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். அவருக்கு அரசியல் தலைவர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.