மண் மனம் மாறாத தேனியில் பிறந்து தரணியில் புகழ் பெற்றவர்களை தெரியுமா..?

O Paneer Selvam Tamil nadu Bala Bharathiraja Theni
By Karthick Sep 15, 2023 11:12 AM GMT
Report

அரசியல், விளையாட்டு, சினிமா என பல துறைகளில் கோலோச்சிய தேனி மண்ணின் மைந்தர்களை குறித்து தற்போது காணலாம். 

பி. டி. ராஜன்

சர் பொன்னம்பல தியாக ராஜன் எனப்படும் பி. டி. ராஜன் சென்னை மாகாணத்தின் முதல்வராக , நீதி கட்சியின் தலைவர்களுள் ஒருவராவார். நீதிக்கட்சியில் சேருவதற்கு முன்பு சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றிய பி. டி. ராஜன் 1920-இல் நீதிக்கட்சி வேட்பாளராக சென்னை சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

famous-personalities-from-theni

1936-ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மெட்ராஸ் மாகாண முதல்வராக இருந்த பி.டி. ராஜன், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்போதைய திமுக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இவரது பேரானவார்.

ஓ பன்னீர்செல்வம்  

தமிழகத்தின் 6ஆவது முதலமைச்சராகவும், 2ஆவது துணை முதலமைச்சராகவும், தமிழகத்தின் நிதித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்காவது முறையாகத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, பணியாற்றி வருகிறார்.

famous-personalities-from-theni

2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 01-ஆம் தேதி வரை தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா சிறைசென்ற போது இருந்த ஓபிஎஸ், 2014-ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகும், பிறகு 2016-ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகவும் முதல்வராக பதவி வகித்துள்ளார்.

டிடிவி தினகரன் 

திருத்துறைப்பூண்டி திருவேங்கடம் விவேகானந்தர் தினகரன் எனப்படும் டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் ஆவார் அதிமுகவின் பொருளாளராகவும், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் டிடிவி தினகரன். 

famous-personalities-from-theni

கடந்த 2018-இல் அதிமுகவில் இருந்து விலகி, அமமுக கட்சியை நிறுவிய டிடிவி தினகரன், 2017 முதல் 2021 வரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆர்.கே. நகரின் உறுப்பினராக இருந்தார்.

பாலு அழகன் 

1925-ஆம் ஆண்டில் தேனி மாவட்டத்தில் பிறந்த ஆர்.பி.அழகனன் என்றழைக்கப்படும் பாலு அழகன், 1946 மற்றும் 1955 க்கு இடையில் ஆறு முதல்-தர போட்டிகளில் மெட்ராஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

famous-personalities-from-theni

1954-55 இல் ஆண்டில் மெட்ராஸ் அணி ரஞ்சி கோப்பையை வென்ற மெட்ராஸ் அணியின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வானொலி வர்ணனையாளராக அவர் பணியாற்றியுள்ளார்.

பாரதிராஜா 

இயக்குனர் இமயம் என போற்றப்படும் பாரதிராஜா தேனியில் பிறந்தவர் தான். மண் மனம் மாறாத படங்களை தமிழுக்கு அளித்து ஸ்டூடியோவில் சிக்கியிருந்த சினிமாவை வெளிஉலகிற்கு கொண்டுவந்தவர் என்ற பெருமை பாரதிராஜாவையே சேரும்.

famous-personalities-from-theni

ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற முன்னணி நடிகைகளை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இது வரை 6 தேசிய விருதுகளையும், 4 பிலிம்பேர் விருதுகள் தெற்கு போன்றவற்றையும் வென்றுள்ளார்.

மேஜர் சுந்தரராஜன்

தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகர்களுள் ஒருவரான மேஜர் சுந்தரராஜன் தேனியில் பிறந்தவரே. 1965 முதல் 2003 வரை தமிழ்த் திரைப்படங்களில் நடித்து அவர், இயக்குநரும் ஆவார்.

famous-personalities-from-theni

 "மேஜர் சந்திரகாந்த்" என்ற மேடை நாடகத்திலும் பின்னர் அதே பெயரிலான திரைப்படத்திலும் அவர் சிறப்பாக நடித்த காரணத்தினால் மேஜர் சுந்தர்ராஜன் என அழைக்கப்பட்டார். திரைப்படங்களில் இவரது குரல்வளமைக்காகவும், உச்சரிப்புத் தெளிவிற்காகவும் சிறப்பானவராகக் கருதப்பட்டார்.

பாலா

தமிழ் திரைப்படவுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான பாலா, தேனியில் பிறந்தவரே. சேது படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து பிதாமகன், நந்தா, அவன் இவன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.  

famous-personalities-from-theni

பாலாவின் தனித்துவமான இயக்கம், எதார்த்தத்தை ஒட்டிய கதைக்களங்கள் போன்றவை தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்க இவரின் படங்கள் மூலமாகவே விக்ரம், சூரியா போன்ற நடிகர்கள் பெரும் புகழ்ச்சியை அடைந்தனர்.

எஸ். எஸ். ராஜேந்திரன்  

இலட்சிய நடிகர் என்றழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் 1950 மற்றும் 1960-களில் அழகு, அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு ஆகியவற்றால் புகழ்பெற்று விளங்கினார்.  

famous-personalities-from-theni

சுமார் 85 படங்களில் நடித்துள்ள எஸ். எஸ். ராஜேந்திரன் ஆரம்பகாலகட்டங்களில் திராவிட கட்சிகளின் முக்கிய நபராக திரைப்படங்களில் ஒளித்துள்ளார். 1962 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.