சேலத்தில் பிறந்து சாதனை புரிந்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.!

Salem
By Sumathi Sep 21, 2023 10:59 AM GMT
Report

தமிழகத்தின் முன்னோடி மாவட்டமாக சேலம் திகழ்ந்து வருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. மலைகள், குன்றுகள் மற்றும் பல்வகை நிலபகுதிகளால் சூழப்பட்ட நிலவியல் சொர்க்கமாக தான் அதனை அறிந்திருப்போம்.

சேலத்தில் பிறந்து சாதனை புரிந்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.! | Famous Personalities From Salem

ஆனால் அங்கு பிறந்து சாதித்த மனிதர்கள் குறித்து நமக்கு தெரியுமா? வாங்க தெரிஞ்சுப்போம்...

 எடப்பாடி கே.பழனிசாமி

சேலத்தில் பிறந்து சாதனை புரிந்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.! | Famous Personalities From Salem

 எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் , தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமாவார். 2017 முதல் 2021 வரை தமிழகத்தின் 7வது முதலமைச்சராக பணியாற்றினார் . 28 மார்ச் 2023 முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.

வீரபாண்டி எஸ் ஆறுமுகம்

சேலத்தில் பிறந்து சாதனை புரிந்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.! | Famous Personalities From Salem

வீரபாண்டி எஸ் ஆறுமுகம், 1957 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரானார். பல தசாப்தங்களாக சேலம் மண்டலத்தில் திமுகவின் முகமாக இருந்து வருகிறார். ஐந்து முறை தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிர்வாக அமைச்சராகவும், வேளாண்மை அமைச்சராகவும் பணியாற்றினார்.  

கே.வி.தங்கபாலு

சேலத்தில் பிறந்து சாதனை புரிந்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.! | Famous Personalities From Salem

கே.வி.தங்கபாலு, மக்களவையின் முன்னாள் உறுப்பினர். இந்திய தேசிய காங்கிரஸ் (INC) அரசியல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். 2008 இல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டார். பொன்னியம்மன் கல்வி அறக்கட்டளையின் கீழ் தங்கவேலு பொறியியல் கல்லூரி, டிஜே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டிஏ வின்சி ஸ்கூல் ஆஃப் டிசைன் அண்ட் ஆர்கிடெக்சர் ஆகிய கல்வி நிறுவனங்களின் தலைவராக உள்ளார். 

சசிதரன்

சேலத்தில் பிறந்து சாதனை புரிந்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.! | Famous Personalities From Salem

சசி என்று அழைக்கப்படும் சசிதரன் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். 1998 இல் சொல்லாமலே மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ரோஜா கூட்டம் (2002), டிஷ்யும் (2006), மற்றும் பூ (2008), ஐந்து ஐந்து ஐந்து(2013), பிச்சைக்காரன்(2016), சிவப்பு மஞ்சள் பச்சை(2019) போன்ற வெற்றிகரமான காதல் திரைப்படங்களை இயக்கினார்.  

மாரியப்பன் தங்கவேலு

சேலத்தில் பிறந்து சாதனை புரிந்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.! | Famous Personalities From Salem

மாரியப்பன் தங்கவேலு, ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 2016 கோடைகால பாராலிம்பிக் விளையாட்டுகளில் ஆடவர் உயரம் தாண்டுதல் T-42 பிரிவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் T-63 பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். இறுதிப் போட்டியில். 2004க்குப் பிறகு இந்தியாவின் முதல் பாராலிம்பியன் தங்கப் பதக்கம் வென்றவர். 2017ல் பத்ம ஸ்ரீ விருது, அர்ஜூனா விருது, 2020ல் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 

நடராஜன்

சேலத்தில் பிறந்து சாதனை புரிந்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.! | Famous Personalities From Salem

கிரிக்கெட் வீரர் நடராஜன், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். 2020-ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் வலைபயிற்சி பந்துவீச்சாளராக இணைந்தார். அவரது அசத்தல் ஆட்டம், இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பல்வேறு நட்சத்திர வீரர்களின் கவனத்தை ஈர்த்தது.

ரித்விகா 

சேலத்தில் பிறந்து சாதனை புரிந்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.! | Famous Personalities From Salem

ரித்விகா றும்படங்கள், விளம்பர படங்கள் என்று நடித்துக்கொண்டிருந்த நிலையில், பாலா இயக்கிய ‘பரதேசி” படத்தின் மூலம் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிட்சியமாகி சீசன் 2வின் டைட்டிலை தட்டிச் சென்றார். அதனைத் தொடர்ந்து, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 

சதீஷ்

சேலத்தில் பிறந்து சாதனை புரிந்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.! | Famous Personalities From Salem

சதீஷ், திரைப்படத் துறை நடிகர். நகைச்சுவை காதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமானவர். 2013-ம் ஆண்டு சிவகார்த்திக்கேயனுடன் எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார். அதன் பின் பல படங்களில் நடித்துள்ளார். 

 சரவணன்

சேலத்தில் பிறந்து சாதனை புரிந்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.! | Famous Personalities From Salem

 சரவணன் திரைப்பட நடிகர் ஆவார். 'பருத்திவீரன் சரவணன்' என்ற பெயரில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவர். சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.