கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிறந்து இந்தியா முழுவது அறியப்பட்ட பிரபலங்கள் குறித்து தெரியுமா?
தென்னிந்தியாவின் முக்கிய இடமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிறந்த இந்த பிரபலங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
இராஜகோபாலாச்சாரி
சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் சுருக்கமாக ராஜாஜி என்று அறியப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் டிசம்பர் 10, 1878ம் ஆண்டு பிறந்தார். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர் இவர். இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாண முதல்வர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.
பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர் ராஜாஜி ஆவார். கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அறிவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். 25 டிசம்பர் 1972ம் ஆண்டு மறைந்தார் ராஜாஜி.
மு. தம்பிதுரை
மு. தம்பிதுரை தமிழக அரசியல்வாதி ஆவார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 மார்ச் 1947ம் ஆண்டு பிறந்தார். 16-ஆவது நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்ட இவரை அனைத்து கட்சிகளும் ஆதரித்தன. அதைத் தொடர்ந்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 1985 முதல் 1989 வரை நாடாளுமன்ற துணைத்தலைவராகவும், பல்வேறு சமயங்களில் தமிழக அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2009, 2014 தேர்தல்களில், அ.தி.மு.க கட்சியின் சார்பாக கரூரில் போட்டியிட்டு வென்றவர். அ.தி.மு.க.வில் கொள்கைப் பரப்புச் செயலராக இருந்தவர். அ.தி.மு.கவின் நாடாளுமன்றக் குழு தலைவராக உள்ளார்.
பாலகிருஷ்ண ரெட்டி
பாலகிருஷ்ண ரெட்டி ஒரு தமிழக அரசியல்வாதியாவார். 2001 முதல் அதிமுக உறுப்பினராக உள்ளார். கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரைச் சேர்ந்த இவர். 2011 ஆண்டு ஒசூர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது ஒசூர் ஒன்றிய செயலாளராக இருந்தார்.
2016 ஆண்டு ஒசூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2017 ஆகஸ்ட் 21 இல் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது அதன்படி பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சராகவும், கால்நடைத்துறை அமைச்சராகவும், சட்டத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.
கணபதி கிருஷ்ணன்
கணபதி கிருஷ்ணன் ஓர் இந்திய தடகள வீரர் ஆவார். 24 ஜூன் 1989ம் ஆண்டு பிறந்தார். இவர் பந்தயநடையில் போட்டியிடும் தமிழ்நாட்டு கிருஷ்ணகிரி மாவட்டக் கோன் கவுண்டனூர்க்காரர் ஆவார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த கணபதி, 2016 உலகக் கோப்பையில் 22வது இடத்தைப் பிடித்தார்.
முரளி ஜி
இவர் ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இதுவரை 7 படங்களுக்கு ஓதிப்பதிவாளராக இருந்துள்ளார். மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, குஷி போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.