தமிழக தலைநகரில் பிறந்து உலகளவில் கோலோச்சும் பிரபலங்கள் தெரியுமா..?

Rahman Udhayanidhi Stalin Vijay M K Stalin Chennai
By Karthick Sep 13, 2023 11:05 AM GMT
Report

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பிறந்து இந்தியளவை தாண்டி உலகளவில் கோலோச்சி வரும் முக்கிய நபர்களை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

அரசியல் ஆளுமைகள் 

சென்னையை சுற்றியே தமிழக அரசியல் களமாடி வரும் நிலையில், சென்னையில் இருந்து பல அரசியல் தலைவர்கள் உருப்பெற்றுள்ளனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த ஊர் சென்னை தான். சென்னையில் பிறந்த அவர் மக்களின் பேராதரவோடு கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட துவங்கி, தற்போது தமிழக முதல்வர் என்பதை கடந்து தேசிய அளவில் முக்கிய தலைவராக உள்ளார்.

famous-personalities-from-chennai

முக ஸ்டாலினின் சகோதரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலாநிதி மாறன் ஆகியோரும் சென்னையில் பிறந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.  

famous-personalities-from-chennai

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரி சென்னையில் பிறந்தவர் தான். தற்போது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒன்றாக கருதப்படும் சீதாராம், கடந்த 1975-ஆம் ஆண்டு முதல் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகின்றார்.

நிர்வாக தலைவர்கள் 

உலக இணையத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet Inc. நிறுவனத்தின் CEO'வாக இருந்து வருகின்றார்.  

famous-personalities-from-chennai

ஐஐடி, ஸ்டான்போர்ட் பலக்லைக்கழகம், பென்னிசில்வனியா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்த இவர், கடந்த 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்து பின்னர் 2015-ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றார்.

இந்தியாவின் மூன்றாவது பெரிய இரண்டு சக்கர உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கும் வேணு ஸ்ரீனிவாசன் சென்னையில் பிறந்தவர்.

famous-personalities-from-chennai

2009-10 ஆண்டுக்கான இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவராகப் பணியாற்றியுள்ள அவர், இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்ம பூஷன் விருது வேணு ஸ்ரீனிவாசனுக்கு கடந்த 2020 ஜனவரி இவருக்கு வழங்கப்பட்டது.

கிரிக்கெட்டும் சென்னையும்   

 சென்னையில் இருந்து பல கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் மிக முக்கிய வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். 1983-ஆம் ஆண்டு கோப்பையை வென்ற அணியில் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சென்னையில் தான் பிறந்தார்.

famous-personalities-from-chennai

அவரை போலவே 2011-ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பையை வென்ற போது ரவிச்சந்திரன் அஸ்வின் அணியின் முக்கிய வீரராக விளங்கினார்.

famous-personalities-from-chennai

இவர்களை அடுத்து ஹெமிங் பாதனி,சடகோபன் ரமேஷ், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோரும் சென்னையில் பிறந்தவர்கள் தான்.    

famous-personalities-from-chennai

இங்கிலாந்து அணியில் மிக முக்கிய வீரராக கருதப்பட்ட நசீர் ஹுசைன்'னும் சென்னையில் பிறந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 1990ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக விளையாட துவங்கிய இவர் 2003-ஆம் ஆண்டு வரை அணியில் முக்கிய வீரராக இருந்தார்.  

கோலிவுட்  

கோலிவுட்டின் பிறப்பிடம் சென்னை என்பதால் நாம் திரையில் கண்டுகளித்த பல நட்சத்திரங்கள் சென்னையில் பிறந்தவர்கள் தான். விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற தமிழ் திரை நடிகர்களும், தெலுங்கு முன்னணி நட்சத்திரம் பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன், ராம் சரண், அல்லு அர்ஜுன் போன்றோர் சென்னையில் பிறந்தவர்கள் தான்.

famous-personalities-from-chennai

அதே நேரத்தில் கன்னட திரைஉலகின் சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், புனீத் ராஜ்குமார் நடிகை திரிஷா போன்றோரும் சென்னையில் பிறந்தவர்கள் தான்.

famous-personalities-from-chennai

இவர்களை போல்வார் இசைப்புயல் ஏஆர் ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, ராக்ஸ்டார் அனிருத், பாடகர் விஜய் யேசுதாஸ் போன்றவர்களும் சென்னையில் பிறந்தவர்களே.