நீண்ட கால நண்பனை கரம் பிடித்த OpenAI நிறுவன CEO - எளிமையாக நடந்த திருமணம்!
பிரபல ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன், தனது நீண்டகால நண்பரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம்
ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சிஇஓ-வாக (CEO) சாம் ஆல்ட்மேன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட அவர், தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆல்ட்மேன், தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை நேற்று திருமணம் செய்துகொண்டார். ஹவாயில் நடைபெற்ற மிகவும் எளிமையான திருமணத்தில், இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
வைரல் புகைப்படங்கள்
திருமணத்தின்போது சாம் ஆல்ட்மேனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஆலிவர் முல்ஹெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் "எனது சிறந்த நண்பரையும், என் வாழ்க்கையின் காதலையும் திருமணம் செய்து கொண்டேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.