25 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி.!
தந்தை இறந்து ஒரே வாரத்தில் ஒரே வாரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தந்தை உயிரிழப்பு
பிரபல ஆங்கில தொலைக்காட்சியான ஹெச்.பி.ஓ தொலைக்காட்சியில் வெளியான நெடுந்தொடரான `Euphoria' தொடர் மூலம் பிரபலமானவர் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் ஆங்கஸ் க்ளவுட் (Angus Cloud).
இவர் தனது தந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். தந்தை மகன் போல அல்லாமல் இருவரும் நெருக்கமான நண்பர்கள் போல் பழகி வந்தனர்.
இந்த நிலையில் இவரது தந்தை உடல்நலக் குறைவால் கடந்த வாரம் காலமானார். தந்தையின் மறைவை ஆங்கஸால் தாங்கி கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாக தனது குடும்பத்தினருடன் சரியாக பேசாமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார். தந்தையின் மீதான அவரது பாசம் அனைவருக்கும் தெரியும் என்பதால் அவரை அதிகம் யாரும் தொந்தரவு செய்யாமல் இருந்துள்ளனர்.
நடிகர் உயிரிழப்பு
தந்தையின் திடீர் மரணத்தால் ஆங்கஸ் அதிகளவிலான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அந்த மன அழுத்தம் அவரை மரணம் வரை கொண்டு சென்றுவிட்டது.
தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வந்த ஆங்கஸ், தந்தை இறந்த சில தினங்களே ஆன நிலையில் நேற்று திடீரென உயிரிழந்தார்.
அவரது இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் ஹாலிவுட் வட்டாரத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறப்பு குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.