The Family Man 2 தொடரை நிறுத்தும் வரை அமேசானை புறக்கணிக்கிறேன் - பிரபல இயக்குநர் அறிவிப்பு

Seeman The Family Man 2 Amazon Prime
By mohanelango Jun 06, 2021 01:22 PM GMT
Report

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள The Family Man 2 தொடர் கடும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கையில் நிகழ்ந்த தமிழர்களின் விடுதலை போராட்டத்தை தவறாக சித்தரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுதுள்ள நிலையில் இந்தத் தொடரை ஒளிபரப்பக்கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆனால் பலத்த எதிர்ப்புகளையும் மீறி The Family Man 2 தொடர் பிரைமில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் The Family Man 2 தொடர் நிறுத்தப்படும் வரை அமேசான் பிரைமை புறக்கணிக்கப்போவதாக இயக்குநர் சேரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, “தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை.” என்று ட்வீட் செய்துள்ளார்.