பிரபல நடன இயக்குநர் காலமானார் - திரையுலகினர் இரங்கல்!

Death Master Dance Famouse
By Thahir Nov 10, 2021 09:34 PM GMT
Report

பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம் மாஸ்டகளின் நடனக்குழுவில் நடன கலைஞராக பணியாற்றியவர் கூல் ஜெயந்த்.

பின்னர் இயக்குனர் கதிர் இயக்கித்தில் 1996ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார் கூல் ஜெயந்த். ஏ. ஆர் ரகுமான் இசையில் இவர் கோரியோகிராபி செய்த ‘முஸ்தஃபா’, ‘கல்லூரிச் சாலை’ ஆகிய பாடல்கள் மூலம் முன்னணி நடன இயக்குனர் ஆனார் கூல் ஜெயந்த்.

பின்னர் அஜித், விஜய் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். கூல் ஜெயந்த் இதுவரை 500 படங்களுக்கு மேல் கோரியோகிராஃபராக பணியாற்றி இருக்கிறார்.

இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

காதல் தேசம் படத்தில் இடம் பெற்ற ஓ..மரியா என்ற பாடல் மூலம் பலருடைய கவனத்தை பெற்ற கூல் ஜெயந்த், வாலி படத்தில் ஏப்ரல் மாதத்தில், , குஷி படத்தில் மொட்டு ஒன்று.., ப்ரியமானவளே படத்தில் வெல்கம் பாய்ஸ், ஆகிய பாடல்களுக்கு நடனம் அமைத்து பிரபலமானார்.

இந்நிலையில், கேன்சர் பாதிப்பால் இன்று காலை உயிரிழந்துள்ளார். இவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. கூல் ஜெயந்த் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.