சச்சின் காலில் விழுந்த பிரபல கிரிக்கெட் வீரர் - பதறிப்போன சச்சின்..!
15-வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த வருடம் நடைபெற்று வரும் போட்டியில் இதுவரை 23 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. சென்ற ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில் கடைசியாக நடந்த போட்டியில் வெற்றி பெற்றது.
புள்ளி பட்டியல்களில் ராஜஸ்தான்,பஞ்சாப்,பெங்களூரு போன்ற அணிகள் டாப் 4 இடங்களில் உள்ளன. அதேபோல் புதிய அணிகளான லக்னோ மற்றும் குஜராத் கூட 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் நல்ல நிலைமையில் உள்ளது.
அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி தொடர் தோல்விகளால் திணறி வருகிறது. சென்னையை போலவே முதல் 4 போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை நேற்று பஞ்சாப்க்கு எதிராக நடந்த தனது 5-வது போட்டியில் வெற்றிக்கு திரும்பும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் புனேவில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 198/9 ரன்கள் குவித்தது.
அதை துரத்திய மும்பைக்கு தேவல்டு பிரேவிஸ், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி வெற்றிக்காக போராடிய போதிலும் ரோகித் சர்மா,
கைரன் பொல்லார்ட் போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 186/9 ரன்களை மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.
இதன் காரணமாக 5-வது தொடர் தோல்வியை பதிவு செய்துள்ள மும்பை தற்போது மீண்டும் புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது தவித்து வருகிறது.
முன்னதாக புனேவில் உள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டி முடிந்த பின்னர் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் பயிற்சியாளர்களும் கைகொடுத்து கொண்டனர்.
அப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆலோசகராக செயல்பட்டு வரும் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் காலில் பஞ்சான் அணிக்காக ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்படும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் விழ வந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியது.
i missed this last night why is he like this? pic.twitter.com/AnlnoyZgOp
— m. (@idyyllliic) April 14, 2022