பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!

Cooku with Comali Death Tamil TV Shows Chef Damu
By Vinoja Oct 25, 2026 05:58 AM GMT
Report

பிரபல சமையல் கலைஞரும், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவருமான செஃப் தாமு, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞரான இவர், கடின உழைப்பால் உயர்ந்து பத்மஸ்ரீ விருதையும் கின்னஸ் உலக சாதனையையும் பெற்றவர்.

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்! | Famous Chef Damu Passed Away

2010ஆம் ஆண்டு தொடர்ந்து 24 மணி நேரம் 30 நிமிடங்கள் சமையல் செய்து, 617 வகையான உணவுகளைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

அண்மையில் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.