Monday, Apr 7, 2025

காதலியை கரம் பிடித்த பிரபல 62 வயது பெண் தொகுப்பாளினி - எளிமையாக நடந்த திருமணம்!

United States of America Marriage World
By Jiyath 2 years ago
Report

பிரபல அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளினி தனது காதலியை திருமணம் செய்துள்ளார்.

திருமணம்

அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடராக 'குட் மார்னிங் அமேரிக்கா' என்ற நிகழ்ச்சி இருக்கிறது. இதை ராபின் ராபர்ட்ஸ் என்ற 62 வயது பெண் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

காதலியை கரம் பிடித்த பிரபல 62 வயது பெண் தொகுப்பாளினி - எளிமையாக நடந்த திருமணம்! | Famous American Show Host Married Her Girlfriend

இந்த நிகழ்ச்சியின் பிராதன தொகுப்பாளினியான இவர் கடந்த செப்டெம்பர் மாதம் 28ம் தேதி எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு ராபின் ராபின்சன் தனது 'தன் பாலின விருப்பத்தை' முகநூல் வாயிலாக தெரிவித்தார். அந்த பதிவை கண்ட ஆம்பர் லைன் (49) என்ற பெண் தொழிலதிபர், ராபின் ராபின் ராபர்ட்ஸை சந்தித்துள்ளார்.

இருவருக்கும் இடையேயான புரிதலால் தங்கள் உறவை வளர்த்து தோழிகளாக இருந்துள்ளனர். பிறகு அது காதலாக மாறி ஒருவருக்கொருவர் நல்ல துணைகளாகவும் மாறியுள்ளனர்.

பதிவு

இந்நிலையில் 18 ஆண்டுகளாக நல்ல உறவில் இருந்த இருவரும் கடந்த மாதம் அமெரிக்காவில் உள்ள பாரிங்டனில் எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளனர்.

காதலியை கரம் பிடித்த பிரபல 62 வயது பெண் தொகுப்பாளினி - எளிமையாக நடந்த திருமணம்! | Famous American Show Host Married Her Girlfriend

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் வாயிலாக தெரிவித்த ராபின் ராபர்ட்ஸ் "எங்கள் கொல்லைப்புறத்தில் வரவேற்பு நிகழ்வுக்குப் பின் மாயாஜாலமான திருமணம் நடைபெற்றது. இதை சாத்தியப்படுத்த உடனிருந்தவர்களை எப்போதும் நினைத்துப் பார்ப்போம். தேனிலவே இதோ வருகிறோம்" என புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.