காதலில் விழுந்த பிரபல நடிகை;தீயாய் பரவும் புகைப்படம் - யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான சூர்யா,தனுஷ்,சிம்பு உள்ளிட்டோருடன் நடித்துள்ளவர் நடிகை ரம்யா.
இவர் தொழிலாதிபர் ரபேல் என்பவரை காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இந்நிலையில் நடிகை ரம்யா தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று கசிந்து இணையத்தில் வைராகும் நிலையில் யார் அவர் புது காதலாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மறைந்த கன்னட நடிகரான புனீத் ராஜ்குமாருடன் இணைந்து அபி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். திவ்யா ஸ்பந்தனா என்ற தனது பெயரை சினிமாவுக்காக ரம்யா என மாற்றிக் கொண்டார்.
கன்னட திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்த ரம்யா,தமிழில் சிம்பு நடித்த குத்து படத்தில் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
இவர் தமிழ்,கன்னடம்,தெலுங்கு என மொத்தம் 36 படங்களில் நடித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு வெளியான நாகரஹாவு என்ற கன்னட படம் தான் இவர் நடித்த கடைசி திரைப்படமாகும்.
திரைப்படங்களில் நடித்து வந்த அவர் திடீரென காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாண்டியா தொகுதி எம்.பி ஆனார். கட்சி பணிகளில் பிசியாக இருந்ததால் நடிப்பை முழுமையாக நிறுத்திவிட்டார்.
தற்போது கட்சி பணிகளில் இருந்த ஒதுங்கி இருக்கும் ரம்யா மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து யார் இவர் என்று ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அந்த நபர் கரண் ஜோஷி என்பதும் ரம்யாவின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது.
இருவரும் காதலித்து வருவதாக கன்னட திரைத்துறையில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.ஆனால் ரம்யா இது குறித்த எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.