இரவில் தோன்றிய கனவால் ஹிஜாப்புக்கு மாறிய பிரபல நடிகை..!

Silambarasan Tamil Cinema
By Thahir Jul 26, 2022 05:37 AM GMT
Report

ஒரு இரவில் தோன்றிய கனவால் பிரபல நடிகை ஒருவர் ஹிஜாப்-க்கு மாறியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்தவர் சனா கான்.

தமிழ் படங்களில் அறிமுகம்

நடிகையாகவும், நடன கலைஞராகவும் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழில் சிம்புவின் சிலம்பாட்டம், பயணம், ஆகிய படங்களில் நடிகையாகவும் ஈ, அயோக்கியா போன்ற படங்களில் பாடல் காட்சிகளில் சிறப்பு தோற்றத்திலும் பணியாற்றியிருக்கிறார்.

இரவில் தோன்றிய கனவால் ஹிஜாப்புக்கு மாறிய பிரபல நடிகை..! | Famous Actress Who Changed To Hijab Due To A Dream

மேலும் 2012-ல் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை சென்றார்.

அண்மை காலமாக சனா கான் திரைப்படங்கள், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி என எதிலும் பணியாற்றுவதோ, பங்கேற்பதோ கிடையாது.

கண்ணீர் விட்ட நடிகை 

கடந்த 2020-ல் முஃப்தி அனஸ் சயத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி ஒன்றை பதிவு செய்திருந்தார்.

Sana Khan

அதில் தனது வாழ்வின் கடுமையாக நாள்கள் குறித்தும் தான் ஹிஜாப் அறிந்ததற்கான காரணம் குறித்தும் பேசியிருந்தார்.

அதில் பேசிய அவர், தனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம், எல்லம் என்னிடம் இருந்தன.ஆனால் நிம்மதி என்னிடம் இல்லை.

அந்த நாட்கள் எனக்கு மிகவும் கடுமையாக இருந்தன.மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன். அப்போது 2019ல் ரமலான் நாளன்று எனக்கு ஒரு கனவு வந்தது.

அதில் ஒரு கல்லறையை பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. நான் அந்த கல்லறையில் நான் இருப்பதை பார்த்தேன்.

இரவில் தோன்றிய கனவால் ஹிஜாப்புக்கு மாறிய பிரபல நடிகை..! | Famous Actress Who Changed To Hijab Due To A Dream

அந்தக் கனவு, இது தான் என் முடிவு என்று இறைவன் எனக்கு உணர்த்தியது போல் இருந்தது. அந்த கனவை கண்டு நான் பதற்றம் அடைந்தேன்.அதன் பின் ஏராளமான இஸ்லாமிய உரைகளை கேட்க ஆரம்பித்தேன்.

உங்களின் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை என்ற அழகிய வாசகம் ஒன்று என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. மறுநாள் காலையில் நான் எழுந்தேன்.அன்று எனது பிறந்த நாள்.

அன்றைய நாளில் இருந்து ஹிஜாப் அணிய ஆரம்பித்தேன். இனி ஹிஜாப்பை ஒரு போதும் கழற்ற மாட்டேன் என உறுதி செய்து கொண்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.