விஜய்யுடன் நடிக்க ரொம்ப ஆசை..பிரபல நடிகை பதிலால் ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் விஜய்யுடன் நடிக்க ஆசை இருப்பதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளராக தமனும், முக்கிய கேரக்டரில் நடிகர் ஷாமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
விஜய்யின் தளபதி 66 படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் அடுத்த மாதம் விஜய்யின் பிறந்தநாளையொட்டி டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்தப் படம் அடுத்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெய் பீம் படத்தில் நடித்த நடிகை லிஜோமோல் ஜோஸ் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விஜய்யுடன் இணைந்து நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது என கருத்து தெரிவித்துள்ளனர்.