எடுக்க கூடாத இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த பிரபல நடிகை கைது...! - ஷாக்கான ரசிகர்கள்...!

Bollywood
By Nandhini Dec 23, 2022 12:12 PM GMT
Report

எடுக்க கூடாத இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த பிரபல நடிகை உர்பி ஜாவேத் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை உர்பி ஜாவேத் கைது

பிக் பாஸ் புகழ் உர்பி ஜாவேத் தன் வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக மக்கள் மத்தியில் மிகவும் பிரபபிரபலமானவர். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள் அல்லது பூ இதழ்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து தனது உடலை மறைத்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இவருடைய கவர்ச்சி உடையைப் பார்த்து பலர் மகிழ்ச்சி அடைந்தாலும், பலர் கண்டனங்களை தெரிவிப்பார்கள்.  

இந்நிலையில், நடிகை உர்பி கைதாயிருப்பதாக தற்போது செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

துபாயில், கவர்ச்சிகரமான ஆடைகளுடன் நடமாட தடை செய்யப்பட்ட பகுதியில், அளவுக்கு அதிகமான கவர்ச்சியுடன் ஆடை அணிந்து நடிகை உர்பி வீடியோ ஷூட் செய்துள்ளார். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு புகார் பறந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உர்பியை கைது செய்துள்ளதாகவும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 

famous-actress-urbi-javed-arrested