அரசியலுக்கு வரும் பிரபல நடிகை திரிஷா - கட்சியினர் குஷி

Trisha Indian National Congress
By Thahir Aug 20, 2022 09:47 AM GMT
Report

பிரபல நடிகையான திரிஷா அரசியலுக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழில் அறிமுகம் 

1999 ஆம் ஆண்டு ஜோடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை திரிஷா கிருஷ்ணன். அதையடுத்து 2002 ஆம் ஆண்டு வெளியான மவுனம் பேசியதே திரைபடத்தில் கதாநாயகியாக நடித்தார்.

திரிஷா,சாமி, லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, சாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அரசியலுக்கு வரும் பிரபல நடிகை திரிஷா - கட்சியினர் குஷி | Famous Actress Trisha Is Entering Politics

தமிழ் அரசியல் திகில் படமான பரமபதம் விளையாடு படத்தில் கடைசியாக திரிஷா நடித்திருந்தார்.

அரசியலில் இறங்கும் திரிஷா 

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் மலையாள திரைப்பட படப்பிடிப்புகளில் பிசியாக இருந்து வருகிறார் திரிஷா. இந்த நிலையில் அவர் அரசியலில் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலுக்கு வரும் பிரபல நடிகை திரிஷா - கட்சியினர் குஷி | Famous Actress Trisha Is Entering Politics

39 வயதில் தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அவர் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை