நித்தியானந்தாவுடன் பிரபல நடிகை தொடர்பு? ரஞ்சிதாவிற்கு அடுத்து இவரா?
பிரபல சாமியாரான நித்தியானந்தாவை பிரபல நடிகை ஒருவர் அடிக்கடி சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தப்பிச் சென்ற நித்தியானந்தா
தமிழகத்தில் தன்னை கடவுளின் அவதாரம் எனக் கூறி வந்தவர் நித்தியானந்தா. இவரின் ஆசிரமத்திற்கு சென்ற நடிகை ரஞ்சிதா அப்படியே இருந்து விட்டார்.
நடிகை ரஞ்சிதா அறை ஒன்றில் நித்தியானந்தாவுடன் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதை தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் தன்னை எப்போ வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இந்தியாவை விட்டு தப்பிச் சென்றவர் தான் நித்தியானந்தா.
நடிகையுடன் தொடர்பு?
தனக்கென தனித் தீவை உருவாக்கி அங்கிருந்து வீடியோ காட்சிகளை வெளியிட்டு வருகிறார். இதனிடையே நடிகை ரஞ்சிதாவை தொடர்ந்து நித்தியானந்தாவிடம் அடைக்கலம் அடைந்துள்ளார் நடிகை கௌசல்யா.
இவர் அடிக்கடி நித்தியானந்தாவை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரை சந்திக்க செல்லும் போதெல்லாம் ஆசிரமத்தில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது நித்தியானந்தாவை சந்தித்துள்ளார் அதன் பிறகு உடல்நிலை சரியானதால் அவர் மீது முழு நம்பிக்கை வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.