பிரபல நடிகை உயிரிழந்தார் - ரசிர்கள் அதிர்ச்சி - சோகத்தில் மூழ்கியது திரையுலகம்

Died ரசிகர்கள் அதிர்ச்சி famous-actress lalita fans-shocked பிரபல நடிகை லலிதா உயிரிழந்தார் திரையுலகினர் இரங்கல்
By Nandhini Feb 23, 2022 04:39 AM GMT
Report

பிரபல குணச்சித்திர நடிகை லலிதா (74) உடல்நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார். இவரது இழப்பு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை லலிதா முதலில் நாடக நடிகையாகத்தான் சினிமாத்துறையில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். இதனையடுத்து, மலையாள சினிமாத்துறையில் நுழைந்த நடிகை லலிதா பல படங்களில் குணச்சித்திர நடிகையாக தன்னுடைய திறமையை வெளிப்படத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

மலையாளம் மட்டுமல்லாமல், தமிழ் படங்களான ‘காதலுக்கு மரியாதை’,‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘அலைபாயுதே’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் பிரபல மலையாள இயக்குனர் பரதனின் மனைவியாவார். கடந்த 1991ம் 2001ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’ 4 முறை கேரள அரசு இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது.

கடந்த ஆண்டு நம்பவர் மாதம் உடல்நலக் குறைவால் லலிதா பாதிக்கப்பட்டு வந்தார். இதனையடுத்து, இவரை தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, உடல்நிலை சற்று சரியானதும் கொச்சியில் உள்ள தனது மகன் சித்தார்த் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். ஆனால், நேற்று நள்ளிரவு நடிகை லலிதா உயிரிழந்தார்.

லலிதாவின் இறுதிச் சடங்கு வடக்கன்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற இருக்கிறது. லலிதாவின் மறைவை கேட்டு அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலர் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.