23 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
ரஜினியின் 169வது படத்தில் பிரபல நடிகையை வில்லியாக நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தனது 169வது படத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் இணையவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தை ஆரம்பிப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க ஐஸ்வர்யாராயிடமும், மற்றொரு நாயகியாக பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தலைவர் 169 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் 1999 ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி என்ற வில்லி கதாபாத்திரம் ஏற்றிருந்தார். இது இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.
அந்த வகையில் தலைவர் 169 படத்தில் ரம்யா கிருஷ்ணன் வில்லி கதாபாத்திரம் ஏற்பார் என கூறப்படுவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil