ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை - வெளியான புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள்

Married Viral Photos
By Nandhini Jan 11, 2023 10:41 AM GMT
Report

ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை ராக்கி சாவந்த்தின் புகைப்படம் தற்போது சமுகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரகசியமாக திருமணம் செய்த பிரபல நடிகை

பாலிவுட் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த்.

இவர் நடிகை மட்டுமல்லாமல், அரசியல்வாதியுமாவார். இவர் நாட்டியக் கலைஞராகவும், அழகுப் பதுமையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். இவர் இந்தித் திரைப்படங்கள் உட்பட, கன்னட, மராத்தி, தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், ராக்கி சாவந்த் தனது காதலன் அடில் கான் துரானியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படத்தில், ராக்கி சாவந்த் ஆடிலுடன் ஒரு திருமண பதிவாளர் அலுவலகத்தில் இருப்பதுபோலவும், திருமணச் சான்றிதழைப் பெறுவது போலவும் உள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட திருமணத்தின் ஒரு புகைப்படமும் தற்போது வெளியாக ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ராக்கி மற்றும் ஆடில் 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டதாக அந்த சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திருமணம் சினிமா பிரபலத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரத்திற்கு கூட தெரியாது.   

famous-actress-got-married-secretly