கொரோனா தடுப்பூசி போடும் போது கதறிய பிரபல நடிகை

covid19 vaccinated nikki
By Irumporai May 11, 2021 12:26 PM GMT
Report

நடிகை நிக்கில் கல்ராணி கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது அலறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் அரசுடன் இணைந்து திரைத்துறை பிரபலங்களும் மக்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை நிக்கி கல்ராணி தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதுடன் மக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என்னுடைய முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். எனக்கு ஊசி என்றாலே மிகவும் பயம். ஆனால் சரியானதைச் செய்வது எனக்கு மிகவும் நன்மையாக அமையும். ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க நேரம் எடுக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் தயவுசெய்து விண்ணப்பித்து தடுப்பூசி போடும் வாய்ப்பு வரை முயற்சி செய்து கட்டாயம் போட்டுக்கொள்ளுங்கள்.

www.cowin.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கூறிய நிக்கி கல்ராணி தனக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு எனக்கு உதவிய சென்னை கார்ப்பரேஷனுக்கு நன்றி.

அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், வீட்டிலேயே இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.