பிரபல நடிகை தற்கொலை..ஆண் நண்பரின் நடவடிக்கையால் விபரீத முடிவு..!
பிரபல பெங்காலி மாடல் நடிகை பிதிசா டி மஜூம்தார் கடந்த புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
பெங்காலி மொழியில் பிரபல மாடலாகவும்,நடிகையாகவும் வலம் வந்தவர் பிதிசா டி மஜூம்தார். இவர் கொல்கத்தாவின் டம் டம் நகரில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியுள்ளார்.

இவர் கடந்த புதன்கிழமை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் நடிகையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பிதிசாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பிதிசா கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிதிசா தனது ஆண் நண்பரின் நடவடிக்கையால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை கவனத்தில் கொண்ட போலீசார், பிதிசாவின் ஆண் நண்பர் அனுபாப் பேராவிடம் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.
முன்னதாக தெலுங்கு நடிகை பல்லவி தே கடந்த 15-ம்தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வருத்தம் வெளியிட்டிருந்த பிதிசா பல்லவியின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவரே தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil