பிரபல நடிகை கடத்தப்பட்ட வழக்கு - போனில் வீடியோ ஆதாரம் கிடைத்தது - போலீஸ் வளையத்தில் சிக்கிய நடிகர் திலீப் - வழக்கு சூடுபிடித்தது

famous-actress நடிகர் வழக்கு abduction-case video-source actor-dileep வீடியோஆதாரம் திலீப்
By Nandhini Apr 08, 2022 10:11 AM GMT
Report

பிரபல நடிகை கடந்த 2017ம் ஆண்டு கேரளாவில் நள்ளிரவில் கடத்தப்பட்டார். இவ்வழக்கின் பின்னணியில் இருந்ததாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

2017ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் நடந்த சம்பவத்தில் 2022 பிப்ரவரி மாதத்திற்குள் இந்த வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது, போட்டோக்கள் எடுக்கப்பட்டது என்றும், அது திலீப்பிடம் உள்ளது என்றும், அவர் உள்பட பலரும் அந்த படங்களை பார்த்துள்ளனர்.

அது தனக்கு தெரியும் என்றும் திலீப்பின் நண்பரும், இயக்குனருமான பாலசந்திரகுமார் வெளிப்படையாக மீடியாக்களிடம் பேட்டி கொடுத்தார்.

பாலசந்திரகுமார் இந்த புகாரை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் கொடுத்தார்.

இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போலீஸ் தரப்பிலும் விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இது தொடர்பாக திலீப்புக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.

நடிகர் திலீப், கேரள டிஜிபி அணில் காந்தியிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரில் பிரபல நடிகை பலாத்கார வழக்கில் என்னை சிக்க வைக்க போலீஸ் முயற்சி செய்து வருகிறது. பாலச்சந்திரகுமார் கூறியதாக வெளியான தகவலின் பின்னணியில் போலீசார் தான் உள்ளனர். இதன் மூலம் எனக்கு எதிராக சதி வேலை செய்வதாக சந்தேகம் உள்ளது என்றார்.

பிரபல நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து எடுத்த வீடியோ காட்சிகள் நடிகர் திலீப் வசம் இருந்ததாக இயக்குனர் பாலச்சந்திர குமார் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கேரள குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளது.

இதனால், இவ்வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. நடிகர் திலீப் பயன்படுத்திய செல்போனைகளை ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

செல்போன் ஆய்வு செய்ததில் அதிலிருந்த தரவுகளை நடிகர் திலீப் அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திலீப் மற்றும் அவரது மைத்துனர் சூரஜ் ஆகியோர் பயன்படுத்திய போன்களிலிருந்து வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. நடிகர் திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 6 போன்களிலிருந்து ஆயிரக்கணக்கான பதிவுகள் மீட்கப்பட்டிருக்கின்றன.

திலீப் மற்றும் அவரது வக்கீல்கள் சாட்சியங்களை சிதைக்க முயற்சி செய்ததாக கிரைம் பிராஞ்ச் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

நடிகை தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி, திலீப் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்றதையும் ஊர்ஜிதம் செய்வதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

திலீப்பின் போனில் நீதிமன்ற ஆவணங்களின் புகைப்படங்களும் சிக்கி இருக்கின்றன.

இந்நிலையில், திலீப்பின் மனைவி காவ்யா சென்னையில் உள்ளதால், அவர் கேரளாவிற்கு வந்தவுடன் அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.     

பிரபல நடிகை கடத்தப்பட்ட வழக்கு - போனில் வீடியோ ஆதாரம் கிடைத்தது - போலீஸ் வளையத்தில் சிக்கிய நடிகர் திலீப் - வழக்கு சூடுபிடித்தது | Famous Actress Abduction Case Actor Dileep