இரவில் திடீர் மாரடைப்பு: பிரபல நடிகர் திடீர் மரணம்

By Fathima Oct 06, 2021 05:11 AM GMT
Report

துர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த அரவிந்த் திரிவேதி மாரடைப்பால் காலமானார்.

ராமானந்த் சாகர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு உருவான தொடர் 'ராமாயணம்'.

இந்த தொடரில் ராவணனாக நடித்தவர் அரவிந்த் திவேதி, தொடர்ந்து இந்தி, குஜராத்தி படங்களில் நடித்து வந்தார்.

தற்போது 82 வயதான நிலையில், மும்பை காந்திவிலியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், மாரடைப்பு ஏற்பட்ட சில நிமிடங்களில் உயிர் பிரிந்ததாகவும் அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.

இரவில் திடீர் மாரடைப்பு: பிரபல நடிகர் திடீர் மரணம் | Famous Actor Died In Heart Attack