பிரபல நடிகர் அக்ஷ்ய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!
பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. உலக நாடுகளில் பரவிய கொரோனா மனித உயிர்களை பறித்து வருகிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் கோராதாண்டவம் ஆடிய கொரோனா சில மாதங்களாக படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், தற்போது கொரோனா 2வது அலை வேகமெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனாவால் அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள், மக்கள் என பலர் பாதிப்படைந்து வருகிறார்கள்.
இதனையடுத்து, தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் மருத்துவர்கள் கூறும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிகிச்சை பெற்று வருவதாகவும் நான் விரைவில் குணமடைந்து விடுவேன் என கூறியிருக்கிறார். இதனால் அக்ஷ்ய் குமாரின் ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
— Akshay Kumar (@akshaykumar) April 4, 2021