புற்று நோயுடன் போராடும் பிரபல நடிகை - ஆறுதல் கூறும் ரசிகர்கள்

FamousActor AffectedCancer FansConsolation
By Thahir Feb 26, 2022 08:24 AM GMT
Report

புற்றுநோயை எதிர்த்து போராடி வருவதாக பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு,தமிழ்,இந்தி,என 26க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் பிரபல தெலுங்கு நடிகையான ஹம்சா நந்தினி.

புற்று நோயுடன் போராடும் பிரபல நடிகை - ஆறுதல் கூறும் ரசிகர்கள் | Famous Actor Affected Cancer Fans Consolation

ஒகடவுடாம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமான அவர் பிரேமகதா,மோகின உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

தெலுங்கு,இந்தி,தமிழ்,கன்னடம் என 26க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். தமிழில் நடிகை சமந்தா நடித்த நான் ஈ மற்றும் ருத்ரமா தேவி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

புற்று நோயுடன் போராடும் பிரபல நடிகை - ஆறுதல் கூறும் ரசிகர்கள் | Famous Actor Affected Cancer Fans Consolation

முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த ஹம்சா நந்தினி சமீபத்தில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது மொட்டைத்தலையுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

புற்று நோயுடன் போராடும் பிரபல நடிகை - ஆறுதல் கூறும் ரசிகர்கள் | Famous Actor Affected Cancer Fans Consolation

அதில் அவர்,இதுவரை 16 முறை கீமோ சிகிச்சை செய்திருப்பதாகவும் ஆனால் புற்று நோயிலிருந்து முழுமையாக விடுபடமுடியவில்லை எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் நிச்சயம் நீங்கள் புற்று நோயில் இருந்து விடுபடுவீர்கள் மனம் தளராமல் இருங்கள்,நாங்கள் உங்களுக்காக பிராத்திக்கிறோம் என ஆறுதல் தெரிவித்துள்ளனர்.