பணத்தை திருப்பி கொடுங்கள்; விரக்தியில் பெற்றோர்கள் செய்த காரியம் - பைஜூஸ்க்கு தொடரும் நெறுக்கடி!
பைஜூஸ் அலுவலகம் புகுந்து பெற்றோர்கள் தொலைக்காட்சியை எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பைஜுஸ்:
கர்நாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பைஜூஸ் பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவனமாகும். இணையவழி கல்வி மூலம் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து தன் பயணத்தை தொடங்கிய சில நாட்களிலே நல்ல வளர்ச்சியடைந்தது.
இந்த நிறுவனமானது சந்தையில் $20 பில்லியன் என்ற அளவிற்கு மதிப்பிடப்பட்டது. தற்போது,கடன்சுமை, பொருளாதார நெருக்கடி, CEOக்கு ’லுக் அவுட்’நோட்டீஸ் போன்ற பல்வேறு பிரச்சனைகளை அந்நிறுவனம் சந்தித்து வருகிறது.
மேலும், கொரோன பேரிடர் காலத்தில் மெரும்பாலான மாணவர்கள் இணையவழி கல்வி கற்கும் அவசியம் ஏற்பட்டிருந்த நிலையில் பைஜூஸ்க்கு அது ஒரு வளர்ச்சிக்காலமாக அமைந்ததிருந்தது.
நெருக்கடி:
இதனையடுத்து, இந்நிறுவனத்தின் தேவை குறைந்து வந்ததால் தற்போது பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. போதிய வருமானம் இல்லததால் பொருளாதார நெருக்கடி,நிறுவனத்தின் CEO ரவீந்திரனுக்கு வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முடியாத ’லுக் அவுட்’ அறிக்கை போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளது.
இந்த நிலையில் அங்கு பயிலும் மாணவன் ஒருவரது பெற்றொர்கள் அவரது பயிற்சி வகுப்பு ஒன்றுக்காக பணம் செலுத்தி இருந்தனர் அதனை திரும்ப தரக்கோரி பைஜூஸ் நிறுவனத்திடம் பல முறை அவகாசம் கொடுத்துள்ளனர்.
கொடுத்த கால அவகாசம் முடிவடைந்தும் பணத்தை தராததால் கோபமடைந்த குடும்பத்தினர்கள், அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு மாட்டப்பட்டிருந்த தொலைக்காட்சியை எடுத்து சென்றுள்ளனர். மேலும், அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம், ‘எங்களின் பணத்தை எங்களிடம் திரும்ப செலுத்தும் போது இந்த தொலைக்காட்சியை வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்றும் கூறிவிட்டு சென்றுள்ளனர்.