குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்த பெற்றோர் - அதிர்ச்சி சம்பவம்!!
நீலகிரி அருகே ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த புதுமந்து பகுதியை சேர்ந்த சந்திரன் - கீதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. சந்திரன் அந்த பகுதியில் தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வெகு நேரமாக வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு துர்நாற்றம் வீசியதை உணர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இரண்டு குழந்தைகள் தரையில் சடலமாகவும், கணவனும், மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டும அதிர்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.