கடன் தொல்லையால் 4 பேர் தற்கொலை..பேட்டியின் போது உடைந்து அழுத காவல்துறை அதிகாரி..!
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் இஷ்டசித்தி விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தவர் பிரகாஷ் இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு காயத்திரி(39) என்ற மனைவியும், நித்யஸ்ரீ (13),ஹரி கிருஷ்ணன்(8) என்ற மகனும்,மகளும் உள்ளனர்.
பிரகாஷ் கடன் பிரச்சனை காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மரம் அறுக்கும் மெஷினை கொண்டு தனது மனைவி,மகள்,மகன் ஆகியோரை கொலை செய்து விட்டு பிரகாஷ் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
காயத்திரியின் தந்தை காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது அனைவரும் ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுத்து சடலமாக கிடந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் இது குறித்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் போலீசார் விசாரணை செய்தனர்.
மேலும் அவர்களின் வீட்டினை போலீசார் ஆய்வு செய்தனர் அப்போது பிரகாஷ் இறப்பதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் இது நானும் என் மனைவியும் இணைந்து எடுத்த முடிவு, இந்த செயலுக்கு யாரும் பொறுப்பல்ல என்று எழுதி வைத்திருந்தார்.இவர்களின் தற்கொலைக்கு கடன் பிரச்சனை தான் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஆரோக்கிய ரவீந்திரன் பேசுகையில், முதலில் நம்முடைய வருமானத்திற்கு தகுந்தாற் போல் செலவு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.
10 ரூபாய் சம்பாத்தித்தால் 8 ரூபாய் வரை செலவு செய்யலாம் 2 ரூபாய் சேமிக்கலாம். 10 ரூபாய் வருமானம் இருக்கும் போது 12 ரூபாய் செலவு செய்தால் கடன் சுமை வரும் என்றார்.
மேலும் அவர் கடன் வாங்கிட்டோம் நெருக்கடி இருக்கு அப்படி என்றால் உடனடியாக புகார் கொடுக்கலாம். காவல்துறையில் புகார் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.
தற்கொலை என்பது ஒரு முடிவு கிடையாது.இவர்கள் தவறாக முடிவு எடுத்தாலும் பச்சிளம் குழந்தைகள் வருங்கால மன்னர்கள் என்று கண் கலங்கினார்.
நம்ம ஒரு தப்பான ஒரு முடிவு எடுத்து நம்ம குழந்தைகளையும் உட்படுத்துவது ரொம்ப தப்பு என்று வேதனையடைந்தார்.